புதுச்சேரி: பிரசாரத்தின்போது மைக் பழுதானதால், தனது  கட்சியின்  சின்னமான டார்ச் லைட்டை தூக்கி வீசி உடைந்த கமல்ஹாசனின் நடவடிக்கை கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் பிரசாரமும் அனல்பறக்கிறது. மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக மநீம தலைவர் கமல்ஹாசன் பரபரப்புரை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு இடத்துக்கும் ஹெலிகாப்டரில் சென்று, பின்னர் பிரசார வேன்மூலம் அவர் பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்று  புதுச்சேரி வந்தவர், நகரப் பகுதி, ஆம்பூர் சாலையில் தனது பரப்புரையை வேனில் இருந்தவாறு பரப்புரை மேற்கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது பிரசார வாகனத்தில் இருந்த மைக் வேலைசெய்யவில்லை. இதனால் பொறுமை இழந்த கமல்ஹாசன்,  தான் போராடி பெற்ற கட்சி சின்னமான டார்ச் லைட்டை தூக்கி வீசி உடைத்தார். இதைக்கண்ட மநீம தொண்டர்களும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு அரசியல் கட்சிக்கு தலைமையேற்று வழிநடத்தி வரும்  கமல்ஹாசன், சிறிது நேரம் மைக் வேலை செய்யாததற்கே பொறுமை இழந்து, அதை உடைத்தவர், மக்களின் குறைகளை எப்படி பொறுமையோடு கேட்பார், அரசியலையும் சினிமாமைப்போல எண்ணுகிறார் போலும்  என பொதுமக்கள் முனுமுனுத்தனர்.

தொடர்ந்து, அங்கிருந்து பேசாமல் டார்ச் லைட் சின்னத்தைக் காட்டியவாறே , வாக்களிக்குமாறு சென்றுவிட்டார்.

‘கமல் டார்ச்லைட்டை தூக்கி வீசிய வீடியோ வைரலாகி வருகிறது…