சென்னை,
டிகர் கமலஹாசனை விட்டு கவுதமி பிரிந்து செல்வதாக அறிவித்து உள்ளார். இந்த நிலையில் கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.‘
அதில், தான்,  யாரைப் பற்றியும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்று அவரது சார்பாக, அவரது  பிஆர்.ஓ அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
kamal-gouth-srtuthi
இந்த மாதம் 1ந்தேதியில் இருந்து, கமலிடம் இருந்து பிரிவதாக நடிகை கவுதமி சமூக வளைதளம் மூலம் தெரிவித்து இருந்தார்.  கடந்த 12 ஆண்டுகளாக தாலிகட்டாமல், மனைவியாக கமலுடன் வாழ்த்து வந்தார் கவுதமி. லிவிங் டு கெதர் என்ற முறையில் இருவரும் குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். கமலுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடைபெற்று விவாகரத்து ஆனது தெரிந்தும் கவுதமி அவருடன் வாழ்ந்து வந்தார்.
தற்போது, கவுதமி, கமலை பிரிவதாக அறிவித்ததால், கமல் மற்றும் கவுதமி குறித்து சமூக வளைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
கமலின் முன்னாள் மனைவிகளின் கமல் பற்றிய கருத்துக்களும், திருமண வாழ்க்கை, கணவன் மனைவு உறவு குறித்து கமல் ஏற்கனவே கொடுத்த விளங்கள் பற்றியும் நெட்டிசன்கள்  கலாய்த்து வருகின்றனர்.
இதையடுத்து, கமலின் பிஆர்ஓ ஒரு அறிக்கையை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டார். ஆனால், அதை, கமல் மறுத்தார். ஒரு சில மணி நேரங்களிலேயே கமல் அந்த அறிக்கையை மறுத்தது ஆச்சரியப்பட வைத்தது.
இதைத்தொடர்ந்து, கமல் மகள் ஸ்ருதிஹாசனுடைய பிஆர்ஓ  ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அந்த அறிக்கையில்,
“யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும், அவர்களுடைய முடிவுகளை பற்றியும் ஸ்ருதி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை….அவரை (ஸ்ருதியை) பொறுத்தவரை தன்னுடைய பெற்றோர், சகோதரி என தன்னுடைய குடும்பத்தின் மேல் அவர் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் மட்டும் தான் பிரதானம்…,”
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.