
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கமல்ஹாசனுடன் மேலும் இணக்கமான கவிஞர் சினேகனுக்கு கமல்ஹாசன் புதிய பதவி ஒன்றை அளித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் என்ற பொறுப்பை அளித்துள்ளார்.
இந்த பதவி குறித்து கவிஞர் சினேகன் தனது ட்விட்டர் பக்கத்தில் : மாநில இளைஞர் அணி செயலாளர் என்ற பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டதாக நான் கருதவில்லை. மாற்றத்திற்கும் நாட்டின் ஏற்றத்திற்கும் தன்னை அர்ப்பணித்து கொள்ள காத்திருக்கும் ஒட்டு மொத்த இளைஞர்களுக்கும் வழங்கப்பட்டதாகவே கருதுகிறேன். வாருங்கள் தோழர்களே நம்மவர்களுக்காக நம்மவரோடு கரம் கோர்ப்போம்’ என்று பதிவிட்டுள்ளார் .
Patrikai.com official YouTube Channel