சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் மற்றும் வன்முறை தொடர்பாக, சேலம் ரேஞ்ச் டிஐஜி பிரவீன்குமார் அபினாபு தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியமூர் கிராமத்தில் பள்ளி மாணவி மரணம் அடைந்த விவகாரம், அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறையினரின் நடவடிக்கை விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், கணியமூர் கிராமத்தில் நடைபெற்ற வன்முறை மற்றும் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்துவதற்காக சேலம் ரேஞ்ச் டிஐஜி பிரவீன்குமார் அபினாபு தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க டிஜிபி சைலேந்திரபாபுக்கு உத்தரவிட்டது.
இதை ஏற்று, டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார். கனியாமூர் வன்முறை தொடர்பாக 6 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது. குழுவின் தலைவராக சேலம் டிஐஜி பிரவீன்குமார் அபநபு நியமிக்கப்பட்டு உள்ளார். அவருடன், ஆவடி பட்டாலியன் தலைவர் ராதா கிருஷ்ணன், எஸ்.பி. கிங்ஸ்லி உள்ளிட்ட 5 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். வன்முறைக்கு பின்னணியில் உள்ள சதியை சிறப்பு புலனாய்வு குழு கண்டறியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.