கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்ம மரணத்தைத் தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு ஏற்பட்ட வன்முறை தொடர்பாக தந்தை பெரியார் திராவிட கழகம், மக்கள் அதிகாரம் அமைப்பு நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே சிறுவர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ள நிலையில், கலவரத்துக்கு மூல காரணமாக இருந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படிந்து வந்த கடலூரை சேர்ந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தநிலையில் கடந்த 13-ம் தேதி அவரது பெற்றோரை தொடர்புகொண்ட பள்ளி நிர்வாகம் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்காத நிலையில், கடந்த 17ந்தேதி வன்முறை ஏற்பட்டது. அப்போது பள்ளி சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்ட நிலையில், 50க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் எரிக்கப்பட்டன. இது தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் வெளியானது. இதை கண்ட மக்கள் பதபதைத்தனர். வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். நீதிமன்றமும் கடுமையாக கண்டித்து.

மாணவி மர்ம மரணம்: கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக பள்ளியைச் சேர்ந்த 4 பேர் உள்பட இதுவரை 329 பேர் கைது!

இதையடுத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வன்முறை தொடர்பாக வெளியான வீடியோ மூலம்,  வன்முறை சம்பவம் தொடர்பாக 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், வன்முறைக்கு காரணமாக, இளைஞர்கள் ஒன்றிணைத்தாக கூறப்படும் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்களை கைது செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பின், மாநில பொருளாளர் கரூரை சேர்ந்த சுரேந்திரன் மற்றும் சிவா, சங்கர், தமிழரசன் ஆகிய 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், தந்தை பெரியார் திராவிட கழக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பிரபு, , மக்கள் அதிகாரம் அமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கள்ளக்குறிச்சி வன்முறைக்கு வாட்ஸப் குழுவும் வெளியூர் நபர்களும் தான் காரணம்… சுற்றுவட்டார கிராம மக்கள்…

காவல்துறையினர் இவர்களிடம் முறையாக விசாரணை நடத்தினால், கள்ளக்குறிச்சி கலவரத்தின் பின்னணி தெரிய வரும். ஆனால், இந்த அமைப்பைச்சேர்ந்தவர்கள் திமுக அரசுக்கு ஆதரவானவர்கள் என்பதால்,  அதை தமிழக அரசு செய்யுமா என்பதும் கேள்விக்குறிதான்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதி நடத்த அனுமதி பெறவில்லை! மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் தகவல்…