விழுப்புரம்: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்மமாக உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள்  5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் வழங்கி நீதிமன்றம்  வழங்கிய நிலையில், முன்னதாகவே அவர்கள் விசாரணை முடிந்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் சர்ச்சையாகி வன்முறை  நடைபெற்றது. இந்த விவகாரத்தை சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறை மனுத்தாக்கல் செய்தது. அதன்படி அவர்களை விசாரிக்க ஒருநாள் வழங்கி விழுப்புரம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று மதியம் முதல் இன்று மதியம் வரை அவகாசம் வழங்கப்பட்டதுடன்,  5 பேரையும், இன்று (28ந்தேதி(  நண்பகல் 12 மணிக்கு  மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும்  நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், சிபிசிஐடி காவல்துறையினர் அவர்களிடம் விசாரணகளை முடித்து, இரவே சேலம் சிறையில் அடைத்துள்ளனர். இன்று மதியம் 12 மணி வரை விசாரிக்க அனுமதி தந்த நிலையில் நேற்றிரவு 5பேரையும் சேலம் சிறையிலடைத்தனர்.

பொதுவாக, போலீஸ் காவலுக்கு வருபவர்களிடம் விசாரணை நடத்தும் காவல்துறையினர், மேலும் சில நாட்கள் அவகாசம் கோருவது வாடிக்கை. ஆனால், இவர்களிடம் விசாரணை முடிவடைந்து, முன்கூட்டியே அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தி உள்ளது., சரியான முறையில் விசாரணை நடத்தப்பட்டதா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.