சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை, அவர் தற்கொலைதான் செய்துகொண்டுள்ளார் என கூறி சென்னை உயர்நீதிமன்றம் பள்ளி நிர்வாகத்தினருக்கு ஜாமின் வழங்கி உள்ளது. இதையடுத்து, ஸ்ரீமதி வழக்கு தொடர்பாக  உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய பெற்றோர் முடிவு  செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி, விடுதி கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து விழுந்து இறந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்டிருக்கலாம் என மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையில், உயர்நீதிமன்ற உத்தரவுபடி மாணவியின் உடன் 2வது முறையாக பிரேத பரிசோதனை  செய்யப்பட்டு, ஜிப்மர் மருத்துவ குழுவினரின் அறிக்கையும் பெறப்பட்டது.

இந்த அறிக்கைகைளின் மூலம், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை, அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என அறிக்கை தெரிவிப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து,  மாணவி ஸ்ரீமதியின் மரணம் கொலை தொடர்பாக, கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட ஸ்ரீமதியின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர். பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமின் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.