சென்னை; கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை விவகார்த்தில் மாணவியின் செல்போன் சென்னை உயர்நிதிமன்ற உத்தரவின்படி, விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தது தொடர்பாக ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் 3 நாட்களாக போராட்டம் நடத்தியபோது, காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்காததால், 4வது நாள் வன்முறை வெடித்தது. அப்போது சமூக விரோதிகளால் , பள்ளி சூறையாடப்பட்டதுடன், ஏராளமான பள்ளி வாகனங்கள் தீ வைத்த கொளுத்தப்பட்டன. இதுதொடர்பான வீடியோ,. புகைப்படங்கள் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக , சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி நிதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். மேலும் தனியார் பள்ளிக்கும் சீல் வைக்கப்பட்டது.
இதில், மாணவி கொலை செய்யப்படவில்லை, தற்கொலை செய்துகொண்டது உறுதியானது. அதைத்தொடர்ந்து பள்ளி சீர் செய்யப்பட்டு படிப்படியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான விசாரணையின்போது, பள்ளி மாணவியின் செல்போனை ஆய்வு செய்ய வேண்டும் காவல்துறையினர் அவரது பெற்றோரிடம் கேட்டனர். ஆனால், அவர்கள் மறுக்கவே வழக்கு உயர்நீதிமன்றம் சென்றது. அப்போது நீதிபதிகள், மாணவியின் செல்போனை ஒப்படைக்க உத்தவிட்டனர்.
அதன்படி மாணவி ஸ்ரீமதியின் செல்போன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்டைக்கப்பட்டது. இதையடுத்து, அந்த செல்போனை ஆய்வு செய்ய சிபிசிஐடி மனுத்தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.