கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்த சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று அதிகாலை மேலும் 3 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையில், திமுக அரசை கண்டித்து, இன்று மாலை பாஜக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் திமுகவினர் விற்பனை செய்த கள்ளச்சாரயம் மற்றும் விஷச்சாராயத்தை அருந்தியதால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் கள்ளக்குறிச்சி மற்றும் பல்வேறு மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளிலும் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 55 பேர் பலியான நிலையில், மேலும் 100-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையில் கள்ளச்சாராயம் அருந்திய சிலருக்கு கண் பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து கண் மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
மெத்தனால் பாதிப்பிற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் கையிருப்பில் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தர். ஆனால், அதனை மக்கள் நல்வாழ்வு அமைச்சர் திட்டவட்டமாக மறுத்து, தவறான தகவல்களை ஈபிஎஸ் பரப்புவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாரார மரணங்களை கண்டித்து, தமிழக பாஜக சார்பில் இன்று மாலை ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.
கள்ளச்சாராய சாவு: திமுக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம்! அண்ணாமலை
தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்! சவுக்கு சங்கர் முழக்கம்