கள்ளக்குறிச்சி: 55 பேரின் உயிர்களை காவுகொண்ட கள்ளக்குற்சிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து 4 நாட்களுக்கு பிறகு சமூக போராள என பீற்றிக்கொள்ளும் நடிகர் சூர்யா வாய் திறந்தார்.  அதுவும்  ஆட்சியாளர்களை மயிலைறகை கொண்டு வருடுவதுபோல கண்டித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு கருணாபுரத்தைச் சேர்ந்த 4 பேர் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் பலர் கடந்த 18ந்தேதி முதல் உயிரிழந்து வருகின்றனர். இந்த சாவை மூடி மறைக்க மாவட்ட ஆட்சியர் முயன்ற நிலையில், அடுத்தடுத்து பலி எண்ணிக்கை உயர்ந்த நிலையில், ஆட்சியிர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கூற்று சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில்,  19ந்தேதி முதல்  மருத்துவமனைகள் சாராயம் குடித்தவர்கள் அடுத்தடுத்துசிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். கருணாபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த, மது அருந்திய பலரும் அதிக வயிற்றுப்போக்கு, கை கால் மரத்து போதல் போன்ற பிரச்னைகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர தொடங்கினர். இதைத்தொடர்ந்த, பலர் அருகே உள்ள மற்ற மவாட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு கல்லூரி மருத்துவமனை வரை 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்தன.   அவர்களை மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து அதிக பாதிப்பு உள்ளவர்களை சேலம், பாண்டிச்சேரி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்தே இந்த விவகாரம் சூடுபிடித்தது. கருணாபுரமே மரண ஓலத்தில் சிக்கியது. அடுத்தடுத்து பல உயிரிழப்புகள் தொடர்ந்து, அந்த பகுதி மட்டுமின்றி அருகே உள்ள கிராமங்களிலும் எதிராலித்து. இதற்கிடையில் இந்த கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தது திமுகவினர் என்பதும், இதுதொடர்பாக புகார் அளித்தும் காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதற்கு காரணமாக தமிழ்நாடு  அரசை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திமுக கூட்டணி கட்சிகளும் கடுமையாக சாடிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என போர்க்கொடி தூக்கி வருகின்றன.

எதற்கெடுத்தாலும் மத்திய பாஜக அரசு, பிரதமர் மோடி, வடமாநிலங்களில் நடைபெறும் பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்பும் திமுக எம்.பி. கனிமொழி இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருப்பது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது  பெண்களின் தாலியறுக்கும் டாஸ்மாக்கை மூட  வேண்டும் என போராட்டம் நடத்திய, அப்போது எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி போன்றோர் ஏன் டாஸ்மாக் கடைகளை மூடவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சமுக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர்.

மேலும், சமூக போராளி என கூறிக்கொண்டு அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து மக்களை குழப்பி வரும் நடிகர்கள் கமல்ஹாசன், சத்யராஜ்,  பிரகாஷ்ராஜ், சூர்யா, ஜோதிகா, கார்த்தி, விஜய்சேதுபதி, சித்தார்த்  போன்றவர்கள், இந்த பெரும் உயிரிழப்பு குறித்து வாய் திறக்காமல் மவுனியாக இருந்து வருகின்றனர். இவர்கள் திமுகவினரின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என அஞ்சுகிறார்களே என  கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.   அதே போன்று கடந்த காலங்களில் மதுவிலக்கு தொடர்பாக சமூக வளைதளங்களில் பாடல்களை வெளியிட்டு குரல் எழுப்பிய மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த கோவன், சமூக  போராளி நந்தினி போன்றவர்களை காணவில்லை.  இவர்கள் குறித்து, நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருவதுடன்,  சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை வெளியிட்டு விமர்சித்து வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு சம்பவம் , தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம், மதுவிலக்கு கோரிக்கை போராட்டம், என்று சினிமா வசனம் பேசுவது போல், கருத்துக்களை வெளியிட்டு பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய, இந்த போலி சினிமா பிரபலங்கள், இப்போது மௌனமாக இருப்பது, அவர்களின் திமுக சார்பு நிலையைக் காட்டுகிறது என்றும் மக்கள் கூறுகிறார்கள்.

இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா மட்டும் நாசூக்காக திமுக அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். எதற்கெடுத்தாலும் சிங்கமாக சீறும் சூர்யா, தற்போது பன்னி போல பதுங்கி அறிக்கை வெளியிட்டு இருப்பது,    அவரின்  கையாகாதனத்தையே வெளிப்படுத்தி உள்ளது. ஆண்மையற்றவனாக நடிகர் சூர்யாக விமர்சித்து உள்ளார். திமுக அரசை நேரடியாக எதிர்த்து பேச முடியாமல் திராணியற்ற நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  இதுதான் இவர்களின் வாய்ச்சவடால் என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது.

விஷ சாராயத்திற்கு அன்பிற்குரியவர்களைப் பலிகொடுத்துவிட்டு அழுது துடிப்பவர்களுக்கு எத்தகைய வார்த்தைகளில் ஆறுதல் சொல்லிவிடமுடியும்? தற்போது அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஊடகங்கள், மக்கள் என அனைத்து தரப்பினரின் கவனமும், கவலையும், கோபமும் அதிகரித்திருக்கிறது. அரசும், ஆட்சி நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு, இழப்பைக் குறைக்க போராடிக் கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால் நீண்ட காலபிரச்சினைக்கு குறுகிய கால தீர்வு என்கிற இந்த வழக்கமான அணுகுமுறை நிச்சயம் பலனளிக்காது.

கடந்த ஆண்டு இதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்து 22 பேர் பலியானர்கள். அரசு தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது. இப்போது பக்கத்து மாவட்டத்தில் அதே மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து கொத்து கொத்தாக மக்கள் இறந்திருக்கிறார்கள் இப்போதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

வாழ்வை மேம்படுத்துவார்கள் என நம்பி வாக்களிக்கும் தமிழ்நாட்டு மக்களை, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி நம்மை ஆட்சி புரிந்த அரசாங்கங்களே டாஸ்மாக் வைத்து மக்களை குடிக்க வைக்கிற அவலத்தை தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ‘மதுவிலக்கு கொள்கை என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நேரத்து பேசுபொருளாக மட்டுமே முடிந்துவிடுகிறது.

டாஸ்மாக்கில் 150 ரூபாய்க்கு குடித்து போதைக்கு அடிமையானவர்கள் பணம் இல்லாதபோது 50 ரூபாய்க்கு கிடைக்கும் விஷச்சாராயத்தை வாங்கிக் குடிக்கிறார்கள். குடிக்கு அடிமையானவர்களின்பிரச்சினை என்பது தனிநபர் பிரச்சினை அல்ல, அந்த ஒவ்வொரு குடும்பத்தின், ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சினை என்பதை எப்போது நாம் அனைவரும் உணரப்போகிறோம்?

அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்திவரும் வன்முறையை உடனடியாக நிறுத்தவேண்டும். குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்க மாவட்டம் தோறும் மறுவாழ்வு மையங்களைத் தொடங்கி அவர்களை குடிநோயிலிருந்து மீட்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் முன்னேற அரசு எத்தகைய தொலைநோக்கு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறதோ, அதேபோல குடிப்பழக்கதிற்கு அடிமையானவர்களின் மறுவாழ்விற்கு முன்னுதாரணமான திட்டங்களை வகுத்து ஓர் இயக்கமாகவே செயல்படுத்த வேண்டும்.

அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனி எதிர்காலத்தில் இதுபோன்ற அவல மரணங்களைத் தடுக்கமுடியும். குறுகிய கால தீர்வை கடந்து தமிழ்நாடு முதல்வர் மதுவிலக்குக் கொள்கையில் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பார் என மக்களோடு சேர்ந்து நானும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் விஷ சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம். இறந்த உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் இருப்பவர்கள் மீண்டு வர பிரார்த்தனை. இனி ஒரு விதி செய்வோம்..! அதை எந்நாளும் காப்போம்.!!

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 55ஆக உயர்வு – மேலும் 30 பேர் கவலைக்கிடம்… இன்று மாலை பாஜக ஆர்ப்பாட்டம்