சென்னை: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12 பேருக்கு கண் பார்வை பறிபோன நிலையில், 156 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 17 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மட்டும் 109 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 12 பேர் கண் பார்வை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி பகுதியில் திமுக பிரமுகர் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த நிலையில், சமீபத்தில் அதிக போதைக்காக மெத்தனாலை சேர்த்து விற்பனை செய்ததால்,. அதை குடித்த நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த கடந்த 18-ம் தேதி அரங்கேறி உள்ளது. அடுத்தடுத்து பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனைகள் மற்றும் புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனி சிகிசிசை பலன்றி இதுவரை 57 பேர் உயிாிழந்துள்ளனா்.
மேலும் நேற்று மாலை 3 மணி நிலவரப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் 111 பேரும், சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் 29 பேரும், புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் 12 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் 4 பேரும் என மொத்தம் 156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவர்களில் 17 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.