சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் இன்று 3வது நாளாக, அவைக்காவலர்களால் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 20ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இநத் தொடரில் அனைத்து த்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முதல்நாளில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு  அவையை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து 21ந்தேதி முதல் அவை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள், கேள்வி நேரத்தி ஒத்தி வைத்துவிட்டு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.  மேலும்  இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரினார். ஆனால், அதை ஏற்க சபாநாயகர் அப்பாவு மறுத்து வருவதால் அமளியில் அதிமுக எம்எல்ஏக்கள் ஈடுபட்டனர். இதனால், அவர்களை அவையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்றைய கூட்டத்தொடருக்கும், அதிமுக எம்எல்ஏக்கள், கருப்பு சட்டை அணிந்தபடி அ.தி  வந்தனர்.  அவை தொடங்கியதும், கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், அதை ஏற்க முடியாது என சபாநாயகர் அப்பாவு கூறியதால்,   அ.தி.மு.க.வினர் தொடர்ந்து சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து கூறிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி தலைவர் உட்பட உறுப்பினர்கள் அவையில் அமர வேண்டும். சட்டசபையில் கேள்விநேரம் முடிந்ததும் பேசலாம். அவைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அ.தி.மு.க. வினர் செயல்படுகின்றனர். சட்டசபையில் அமர்ந்து பேச அ.தி.மு.க.வினருக்கு விருப்பமில்லை என்றவர், அவர்களை வெளியேற்றும் படி அவைக்காவலர்களுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து,   அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை அவை காவலர்கள் வெளியேற்றினர். இன்று 3வது நாளாக அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கியது. அதையடுத்து,  பொதுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.