சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுவதை நிறுத்த வேண்டும் என்று கூறியதுடன், நீதிமன்ற உத்தரவை தமிழகஅரசு மதிக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்தது.

விழுப்புரம் மாவட்டம் கடந்த அதிமுக ஆட்சியின்போது, இரண்டாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, அம்மாவட்டத்திற்கான ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு, அம்மாவட்டத்தின் வீரசோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன.
கோவில் நிலைத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதை எதிர்த்து, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதுபோல கோவில்களுக்கு அறங்காவலர் நியமிப்பது குறித்த வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்னின் கடந்த விசாரணையின்போது, கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்ததுடன், நிலத்தை மதிப்பீடு செய்ய இரு குழுக்களை நியமித்தது.
18
இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளக்குறிச்சி ஆட்யிர் அலுவலகம் கட்டுமானம் நடைபெறும் இடம் தொடர்பாக மதிப்பீடு செய்ய தனியார் நிறுவனங்கள் முன்வராதது குறித்து நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கோவில் நிலத்தை சுதந்திரமாக மதிப்பீடு செய்ய ஏதுவாக, வெளி மாநிலத்தைச் சேர்ந்த மதிப்பீட்டாளர்களை பரிந்துரைக்க தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது.
தொடர்ந்து பேசிய தலைமைநீதிபதி சஞ்சிப் பானர்ஜி, சிதிலமடைந்த கோவிலை சீரமைக்கவும், கோவில் பராமரிப்புக்காக தொகுப்பு நிதி உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளனர், கோவில்களுக்கு, அறங்காவலர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதுடன், நிலத்துக்கான இழப்பீட்டை முதலில் தீர்மானிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், நீதிமன்ற அனுமதியின்றி, கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்து வழக்கின் விசாரணையை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
[youtube-feed feed=1]