கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு தனது காதலியை இன்று திருமணம் செய்துகொண்டார். இது அந்தப் பகுதி அதிமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருபவர் அ.பிரபு. இவருக்கும் தியாகதுருகத்தைச் சேர்ந்த சவுந்தர்யா என்பவருக்கும் சில வருடங்களாக காதல் இருந்து வந்துள்ளது. திருச்செங்கோட்டில் உள்ள கலைக் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் 3-ம் ஆண்டு பயின்றுவருகிறார். இந்த நிலையில், இன்று இருவீட்டார் சம்மத்திதுடன் இன்று திருமணம் செய்துகொண்டார்.
கடந்த கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பிரபு. ஜெ.மறைவுக்கு பிறகு எடப்பாடி அணியில் இணைந்தார். பின்னர் அங்கிருந்து விலகி டிடிவி தினகரன் அணிக்கு தாவினார். பின்னர் கடந்த ஆண்டு (2019) டு கள்ளக்குறிச்சி மாவட்டம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதையடுத்து, மீண்டும் எடப்பாடி அணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இளைஞரான பிரபு, தனது காதலியான சவுந்தர்யாவை திருமணம் செய்து கொள்வது தொடர்பாக இழுபறி நீடித்து வந்தது. இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணம் நடைபெற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் இன்று தியாகதுருகத்தில் உள்ள தனது வீட்டில் பெற்றோர்கள் தலைமையில், சாதிமறுப்பு திருமணம் எளிமையான முறையில் நடந்து முடிந்தது.
இதையடுத்து எம்எல்ஏ பிரபு – சௌந்தர்யா தம்பதிக்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel