டில்லி:

உத்கல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்ட காரணத்தால் மீரட்-முசாபார் நகர்- சகாரன்பூர் ரெயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் 22 பேர் பலியாயினர். 156 பேர் காயமடைந்தனர்.

விபத்து காரணமாக நிறுத்தப்பட்டிருந்த காத்தவுலி இடையிலான ரெயில் போக்குவரத்து இன்று நள்ளிரவு முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது என வடக்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி ரெயில் எண் 54542 அம்பாலா-மீரட் சிட்டி பயணிகள் ரெயில் காத்தவுலியை அதிகாலை 1.21 மணிக்கு இந்த பகுதியை கடந்து செல்லும் என்று ரெயில்வே செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.இச்சம்பவம் தொடர்பாக 3 உயர் அதிகாரிகள் கட்டாய விடுப்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதில் ரெயில்வே வாரிய உறுப்பினரும் அடக்கம். இவர் துறை செயலாளர் அந்தஸ்தில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஒரு தண்டவாள பொறியாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகளில் முதுநிலை கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர், தண்டவாள பொறுப்பில் உள்ள முதுநிலை மூத்த பிரிவு பொறியாளர், ஜூனியர் இன்ஜினியர் ஆகியோர் அடக்கம். வடக்கு ரெயில்வே பொது மேலாளர், கோட்ட மண்டல மேலாளர் (டில்லி), ரெயில்வே வாரிய பொறியாளர் உறுப்பினர் ஆகியோர் விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டவர்கள்.

விரைவில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.