சென்னை: இந்தியாவின் பழமையா கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் புதிதாக அமைக்கப்பட்டள்ள பெவிலியன் பகுதிக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் “கலைஞர் கருணாநிதி ஸ்டாண்டு” என்று பெயர் சூட்டங்பபட உள்ளது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலிடன் வரும் 17-ந் தேதி திறந்து வைக்கிறார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிக்காக சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு பகுதியாக புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. அதைத்தொடர்ந்து, சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள அண்ணா பெவிலியன் பகுதி இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிதாக கேலரி கட்டப்பட்டு உள்ளது. அத்துடன், வீரர்கள் தங்கும் அறை, அலுவலகங்கள், ரசிகர்கள் அமரும் இடம் உள்ளிட்டவை புதிதாக கட்டப்பட்டு தயாராக உள்ளன.
நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய பெவிலியன் பகுதிக்கு,. கலைஞர் கருணாநிதி இருக்கை என பெயர் சூட்டி, அதை வரும் 17ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் இந்திய கிரிக்கெட் அணியின் முதல்வர் கேப்டன் தோனியும் கலந்துகொள்கிறார். இதுமட்டுமின்றி, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் ஐ.சி.சி. சேர்மனும் இந்திய கிரிக்கெட் சங்க தலைவருமான என்.சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.ஸ்டேடியத்தில் உள்ள அண்ணா பெவிலியனை கருணாநிதி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.