பேராசிரியர் உள்பட 4 பேர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக கூறி திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.

சம்பந்தப்பட்டவர்களை பணி இடைநீக்கம் செய்யும் வரை ஓயமாட்டோம் என உறுதியாக தெரிவித்த அவர்கள் நேற்று மாலை போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக தெரிவித்தனர்.

மேலும், இன்று காலை 7 மணிக்கு மீண்டும் போராட்டம் தொடரும் என மாணவிகள் தரப்பு தகவல் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஏப்ரல் 6 வரை கல்லூரி மூடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாணவிகள் யாரும் இதுவரை எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்காததால் காவல் துறையினர் விசாரணை நடத்தவில்லை என்று சென்னை மாநகர காவல் கூடுதல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.