Dinesh Kumar  அவர்களின் முகநூல் பதிவு:
2

“இன்று இரவு SETC பேருந்தில் 3 பேர் கன சிரத்தையாக தங்கள் மொபைல்களில் ஹெட்போன் கனெக்ட் செய்து முழு படத்தையும் பார்த்து முடித்துவிட்டார்கள். எட்டிப் பார்த்ததில் ரஜினியும் அவரது தாடியும் மட்டுமே தெரிந்தது.
இருப்பதிலேயே செமத்தியான வியாபார டிசைன் “பாகுபலி” படத்திற்கு செய்ததுதான். சும்மாவா… திருட்டு விசிடியின் தலைநகரான பாண்டிச்சேரியிலேயே 5 வாரங்கள் செமத்தியாக ஒட்டினார்கள். இந்தியில் தர்மா புரொடக்ஷனில் ஒப்படைத்து நன்றாக விளம்பரப்படுத்தி பெரு லாபம் பார்த்தனர். 250 கோடிகள் போட்டு சுமார் 500-600 கோடிகள் எடுத்த டிசைன் அது.
ஆனால், கபாலியில் தாணு குறைந்தது 300 கோடிக்கு டார்கெட் செய்தார். ஆனால் செலவு ரொம்ப கம்மி. முன்பே குறிப்பிட்டது போல இது universal commercial subject கிடையாது. இது போன்ற படத்தை long and sustainable release செய்து, கம்மியான MG ல் நல்ல லாபம் பார்த்திருக்கலாம். ஆனால் நடந்தது அப்பட்டமான வணிகச் சுரண்டல். சட்டவிதிமுறைகளைத் தூள் தூளாக்கிய டிசைன்.
லிங்கா படத்திற்கு Dec 12 என்னும் வியாபார மந்திரம். இதற்கு மற்றொன்று. ஆனால் இதே தமிழகம் தான் விசிடி இருந்த காலத்தில் தெலுங்கு / கேரளா / கன்னட ரிலீஸ் இல்லாத போது, 100 நாட்களுக்கு மேல் ஒட்டியது. ஏனென்றால், அப்போது நடந்தது fair business. 100 நாட்களும் தினசரி பார்த்த ரஜினி ரசிகர் இன்று 1000 கொடுத்து பார்க்கிறார். எத்தனை நாள் பார்ப்பார்??
ரஜினி உடனடியாகத் தலையிட்டு தனது வியாபார டிசைன்களை சரி செய்ய வேண்டும். “அவருக்கு பாவம்.. இதெல்லாம் தெரியாது” என்று புனிதப் படுத்தினால் அதன் விளைவு அடுத்த புதன் தெரியும்.
மருத்துவமனையில் டாக்டர் பெயரைச் சொல்லிக் கொள்ளையடிக்கும் அட்டென்டர் கதையில் ரஜினி பாவம் ரொம்ப நாளாக “அப்பாவி” டாக்டராக இருக்கிறார்.”