பிரபல நடிகரின் தம்பி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

Must read

திருவனந்தபுரம்

றைந்த நடிகர் கலாபவன் மணியின் தம்பி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பிரபல மலையாள திரைப்பட நடிகரான கலாபவன் மணி முதலில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆகி பிறகு வில்லன், கதாநாயகன் என படிப்படியாக உயர்ந்தவர் ஆவார்.  இவர் பல தென் இந்திய மொழிப்படங்களில் நடித்துள்ளார்.  சில ஆண்டுகளுக்கு முன்பு மர்மமாக மயக்கத்தில் இருந்த இவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் இழந்தார்.  இவர் மரணத்தில் மர்மம் உள்ளதாகப் புகார் எழுந்தது.

கலாபவன் மணியின் தம்பியான ராமகிருஷ்ணன் ஒரு மோகினி ஆட்டக் கலைஞர் ஆவார்.  இவர் திருச்சூரில் உள்ள சங்கீத நாட்டிய அகாடமியில் மோகினி ஆட்டம் நடன நிகழ்ச்சி நடத்த ஆன்லைன் மூலம் அனுமதி கோரி இருந்தார்.  அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதையொட்டி அவர் சங்கீத நாடக அகாடமி முன்பு போராட்டம் நடத்தியது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று இரவு ராமகிருஷ்ணன் தனது வீட்டில் விஷம் அருந்தி மயக்க நிலையில் இருந்துள்ளார்.  ராமகிருஷ்ணனின் உறவினர்கள் பதறிப்போய் அவரை சாலக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  மருத்துவமனையில் ராமகிருஷ்ணனுக்குச் சிகிச்சை நடந்து வருகிறது.  இவர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

More articles

Latest article