ஜார்கண்ட்:
ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியாக இருந்த ஹாஜி ஹுசைன் அன்சாரிக்கு கொரோனா தொற்று இருப்பது சமீபத்தில் தெரியவந்தது.

ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியாக இருந்த ஹாஜி ஹுசைன் அன்சாரிக்கு கொரோனா தொற்று இருப்பது சமீபத்தில் தெரியவந்தது.

இதனையடுத்து அவர் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவர் கொரோனாவில் இருந்து மீண்டதாக இரு தினங்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஹாஜி ஹுசைன் அன்சாரி திடீரென உயிரிழந்தார்.

அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததுள்ளது,. ஜார்கண்ட்டின் மதுபூர் தொகுதியில் தொடர்ந்து 4 முறை சட்டமன்ற உறுப்பினராக ஹாஜி ஹுசைன் அன்சாரி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.