
கார்த்தி நடிப்பில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் , சாம் சிஎஸ் இசையமைக்கும் படம் ‘கைதி’ இதில் நரைன், ரமணா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படதில் கார்த்திக்கு நாயகி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது . பாடல்கள் கூட கிடையாது
தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கும் இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
தீபாவளி வெளியீடு என்றாலும், அக்டோபர் 24, 25 அல்லது 27 ஆகிய மூன்றில் ஒரு தேதியை முடிவு செய்ய ஆலோசனை நடத்தினார்கள். இறுதியில், அக்டோபர் 25-ம் தேதியைத் தேர்வு செய்து அறிவித்துள்ளது படக்குழு. முதலில் அக்டோபர் 27-ம் தேதி தீபாவளி அன்று வெளியிடலாம் என்றுதான் முடிவு செய்தார்கள். ஆனால், அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அக்டோபர் 25-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்து அறிவித்துவிட்டார்கள்.