இன்று சென்னை முழுவதும் காணப்பட்ட கடலை போட பொண்ணு வேணும் என்ற ஆபாச போஸ்டர் சர்ச்சைகளை எழுப்பி உள்ள நிலையில், இதுகுறித்து சமூக வலைதளங்களில் கடுமையான கண்டங்கள் பதிவிடப்பட்டு உள்ளது.
இது போல ஒரு தரம் கெட்ட விளம்பரத்தோடு வரும் திரைப்படத்தின் first look-கினை , நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டால், அது அவருக்கு அவமானமே அன்றி பெருமை அல்ல. என்றும் விமர்சிக்கப்பட்டு உள்ளது.
இன்று காலை சென்னையின் பல இடங்களில் …. போட பொண்ணு வேணும் என போஸ்டர்கள் காணப்பட்டது. இந்த போஸ்டரில் பார்ப்பதற்கே ஆபாசமாக தெரிந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் இந்த போஸ்டர் குறித்து கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.
கடலை போட பொண்ணு வேணும் என காணப்படும் இந்த போஸ்டரில் கடலை என்ற வார்த்தை மறைக்கப்பட்டு …… போடப்பட்டு இருப்பதால், அதை பார்ப்போர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த போஸ்டரை கண்ட பெண்கள் உள்பட பொதுமக்கள் முகம் சுழித்தனர்.
சென்னை முழுவதும் காணப்படும் வித்தியாசமான மற்றும் ஆபாசமான போஸ்டர்
இன்று திடீரென நகர் முழுவதும் முளைத்துள்ள இந்த போஸ்டரை திடீரென பார்த்த மக்கள் சற்றே அதிர்ச்சி அடைந்தனர். இந்த போஸ்டரில் டஸ் கோடு போடப்பட்டு. ……. அதனுடன் போட ஒரு பொண்ணு வேணும் என்று அச்சிடப்பட்டு உள்ளது. அதன் அருகில் படத்தின் ஸ்டில்லும் பெயரும் ஒட்டப்பட்டுள்ளது. இதை கண்ட பொதுமக்கள் ஏராளமானோர் இதுபோன்ற ஆபாச போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர்.
இந்த போஸ்டரை பார்த்ததும், ஒருவருடைய மனதில் தோன்றும் நிகழ்வுகள் கற்பனைக்கு எட்டாதது. ஆபாசமான இந்த போஸ்டர்களை ஒட்டியது யார் என்றும் கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் இந்த போஸ்டர் கடலை போட பொண்ணு வேணும் என்ற படத்திற்கான போஸ்டர் என்று தெரிய வந்தது. இதற்கிடையில், இந்த போஸ்டர் குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. பலர் போஸ்டர் வெளியிட்ட பட நிறுவனம் மீது கடுமையாச சாடினர். இதுபோன்ற போஸ்டர் வெளியிட்டதற்காக பட நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வளரும் நடிகரான விஜய்சேதுபதி இதுபோன்ற மட்டரகமான படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிடக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர்.