காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நிகழ்ந்த இரண்டு தற்கொடை பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளில் 170க்கும் மேற்பட்ட ஆப்கான் குடிமக்களும் 18 அமெரிக்க ராணுவத்தினரும் உயிரிழந்ததாக பதகவல் வெளியாகியுள்ளது  உயிரிழப்பு 180ஐ தாண்டியுள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இது மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைபற்றியதிலிருந்து அங்கு அசாதாரணமான சூழலே நிலவுகிறது. அங்கு வசித்து வந்த உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்பட ஆப்கன் மக்களும், அங்கிருந்து வெளியேற முயற்சித்து வருகின்றன. இதனால்,  மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்துவருகிறார்கள். கிடைத்த விமானத்தில் கிளம்பி, ஆப்கனைவிட்டு வெளியேறினால் போதும் என மக்கள் வெளியேறுகின்றனர்.

இந்தநிலையில்தான்  காபூல் விமான நிலையத்தில் திடீரென அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இதனால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு 180 கடந்துள்ளது. உலக நாடுகள் இந்த வன்முறை செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதனிடையே குண்டுவெடிப்பால் நிறுத்தப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து மீண்டும் காபூலில் தொடங்கியுள்ளது.

காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஐஎஸ்-கோராசன் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த பயங்கரவாத அமைப்பானது  ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கோராசன் மாகாணத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இது தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத  அமைப்பில் இருந்து  வெளியேறியவர்களும், ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்பில் இருந்து வெளியேறியவர்களும் சேர்ந்து உருவாக்கிய பயங்கரவாத அமைப்பு என்று அறியப்பட்டுள்ளது.