அறந்தை வைகோதாசன் அவர்களின் முகநூல் பதிவு:

download

“ஆத்தா அப்பன், பொண்டாட்டி புள்ளைங்கள விட்டுட்டு வந்து அனாதைகளா கிடக்கிற கூட்டத்திற்கு மானம் ரோசம் என்ன விலைன்னு கேட்டா????
ராத்திரி பொழுதுசாஞ்சு வந்து காலையில போட்டுட்டு போன பாத்திரத்தை கழுவி, சமைச்சு சாப்பிட்டுட்டு ஊருக்கெல்லாம் போன்பேசிட்டு ஒரு மணிக்குமேல தூங்கப்போயி,
காலையில் அஞ்சுமணிக்கு எந்திரிச்சு அரக்கபரக்க ஓடிப்போயி லாரியில் ஏறி உக்காந்து வேலையிடத்துக்கு போய், நாள் முழுக்க உழைச்சாத்தான் $16அல்லது $18 வெள்ளி சம்பளம் கிடைக்குது இந்த நாட்டுல.
ஆனா இரண்டுமணிநேரம் குத்தாட்டம் போடுற கபாலி படத்துக்கு $25 வெள்ளி கட்டணமாம்!”