சமீபத்தில், பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்து வெளியான “அட்ரா மச்சான் விசிலு”  படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி ரோலில், பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்தார். அந்த படத்தில் “சூப்பர் நடிகராக” வரும், பவர்,  அதிக விலைக்கு தனது படத்தை விற்பார். அதனால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் நட்ட ஈடு கேட்கும்போது, விரட்டி அடிப்பார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைத்ததா, பவர் சூப்பர் ஸ்டார் திருந்தினாரா என்பதுதான் கதை.
இந்த படத்தில் அப்படியே ரஜினியை இமிடேட் செய்து நடித்திருந்தார் பவர் ஸ்டார். பஞ்ச் டயலாக்குகள், அறுபது வயதில் இருபது வயது ஜோடி, கட் அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிசேகம்..  இப்படி ரியல் காட்சிகள் நிறைய வரும்.
இப்படி திரையில் ரஜினியை கலாய்த்த, பவர், இப்போது நிஜத்திலும் கலாய்த்திருக்கிறார். a
தனது ட்விட்டர் பக்கத்தில், “கபாலி….    ..டேய்.. முடியலடா.. தெரியாம வந்துட்டேன்டா.. ப்ளீஸ்டா விட்டுருங்கடா” என்று பதிவிட்டிருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன்.
அதோடு, “ரஜினிதான் பாவம்,  ஒவ்வொரு தடவையும் ஷங்கர் மாதிரி  யாரையாச்சும் எதிர்பார்க்கிறார்.   ஆனா வர்றது எல்லாம் லிங்குசாமியா இருக்கு” என்றும் எழுதியிருக்கிறார்.
13731556_1351047314972374_8559342163561978374_n
இவரது “அட்ரா மச்சான் விசிலு” படத்தைப்போலவே, இந்த ட்விட்டர் பதிவையும் இதுவரை ரஜினி ரசிகர்கள் கண்டுகொள்ளவில்லை. ஒருவேளை எதிர்ப்பு தெரிவித்தால், “அது என் ட்விட்டர் அக்கவுண்ட்டே  அல்ல” என்று சொல்வார் என எதிர்பார்க்கலாம்.
சினிமாக்காரர்களின் வழக்கம் இதுதானே..!