“கபாலி வசூல் மோசடியில் ரஜினிக்கு பங்கு இல்லையா?”: பா.ரஞ்சித் சிறப்பு பேட்டி
“கபாலி” காய்ச்சல் இன்னும் முடிந்தபாடில்லை.  பத்திரிகை, தொ.கா, சமூக வலைதளங்கள் எங்கும் “கபாலி” என்பதே பேச்சு. ஆதரித்தும் எதிர்த்தும் பலவேறு கருத்துக்கள்.
நமது patrikai.com  இதழும் விதிவிலக்கல்ல. இருவித கருத்துக்களுக்கும் இடம் கொடுத்து கபாலி செய்திகளை வெளியிட்டோம்.
படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களின் பேட்டி, கருத்துக்களும் ஊடகமெங்கும் நிரம்பி வழிகின்றன. கபாலி குறித்து செல்வேறு சிம் வேறாக அலசியாகிவிட்டது. அதில் விடுபட்ட   ஐந்தே   கேள்விகளுடன் அவரை அணஉகினேன். அதி்ல் ஒரு கேள்வியை மட்டும் தவிர்ததுவிட்டு  மீதம் நான்கு கேள்விகளுக்கு சுருக்கமாக அதே நேரம் மிக வெளிப்படையாக பதில் அளித்தார்.    
இதோ அவர், patrikai.com  இதழுக்கு அளித்த short and special  பேட்டி..
a
வணக்கம் ரஞ்சித் சார். உங்களது தொலைக்காட்சி பேட்டிகள் அனைத்துமே சிறப்பு. உங்களது முந்தைய படங்களைப்போலவே கபாலி திரைப்படமும் ரசிக்கும்படி இருந்தது. வாழ்த்துகள்!
 நன்றி, நன்றி சார்..!
இதுவரை கபாலி குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டன. ஆகவே பேசா பொருளாக இருக்கும் சில கேள்விகள் மட்டும்.  இதுவரை இல்லாத அளவுக்கு ஆகப்பெரும்பாலான திரையரங்குகளில் கபாலி திரையிடப்பட்டிருக்கிறது. ஆகவே, சிறிய பட்ஜெட் படங்கள் திரையிடுவது தள்ளிப்போகிறது.  இதனால் சிறிய தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு பொருதாளார சுழற்சி தடுக்கப்படுகிறது. திரைப்பட தொழிலாளர்களும் வேலை குறைந்து பாதிக்கிறார்கள்.  ஒரு சினிமா ஆர்வலராக  இதை எப்படி பார்க்கிறீர்கள்? ஏற்கெனவே சில படங்கள் இப்படி வந்திருக்கின்றன என்பது உங்கள் பதிலாக இருந்தால், அந்த படங்கள் பற்றிய உங்கள் விமர்சனத்தையும் சொல்லலாம்.
அது தப்புதான்.  கபாலி்க்காக மற்ற படங்களை திரையிடாமல் இருக்கும்  சூழல் மிகத் தவறுதான். எனக்கும் அதில் உடன்பாடு இல்லை.
ஒரு சராசரி இயக்குநராக இல்லாமல், சமூக நோக்கும் கொண்டவராய் இருக்கிறீர்கள். கபாலி படத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பல மடங்கு அதிகமாக 3000 ரூபாய் வரை  கட்டணம் வசூலிக்கப்பட்டது.  இதனால் ரஜினி ரசிகர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.. கருப்பு பண புழக்கத்தால் அரசுக்கும் இழப்பு. இது குறித்து  திரைப்பட படைப்பாளி மற்றும் சமூக ஆர்வலராக உங்கள் கருத்து என்ன?
நிச்சயமா இதை நான் எதிர்க்கிறேன்.  இதிலும்  எனக்கு உடன்பாடு இல்லை.
கபாலி பற்றிய இன்னொரு விமர்சனம். அதீத விளம்பரம். அந்த படத்தை பார்க்காவிட்டால், அது பற்றி பேசாவிட்டால் தவறாகிவிடுமோ என்கிற குற்ற மனப்பான்மையை ஏற்படுத்தும் அளவுக்கு விளம்பர வீச்சு. இது குறித்து..
ம்..  ஒரு படம் டைரக்ட் பண்றோம். நம்மால் முடிந்த வரை சில விஷயங்களை கண்ட்ரோல் செய்யறோம். அவ்வளவுதான் முடிகிறது..!
 
 
“கோயில்களில் கற்சிலைகளை பார்க்க ஆயிரம் ரூபாய் கொடுக்கும்போது, வாழும் கடவுளான ரஜினியை பார்க்க ஆயிரம் ரூபாய் கொடுத்தால் என்ன தவறு” என்று பேசியதாக  ஒரு தகவல் உலவுகிறதே.  சமூக ஆர்வலரான நீங்கள், ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயலலாமா?
நான் அப்படி சொல்லவே இல்லை.  அப்படி ஒரு பொய்யை திட்டமிட்டு பரப்புகிறார்கள். முகநூலில் இருக்கும் “..”  என்பவர் தொடர்ந்து என்னைப் பற்றி தவறாக எழுதிவருகிறார். அவர் ஆரம்பித்துவைத்த பொய்தான் இது. அவரது பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை.
என்னை கார்னர் பண்ணி தாக்குகிறார்கள். . இது திட்டமிட்ட சதி.  
பேட்டி: டி.வி.எஸ். சோமு