கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ’காவலுதாரி’ படம், தமிழில் ‘கபடதாரி’ என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது.
இப்படத்தை ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்க , தனஞ்ஜெயன் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் சிபிராஜ், நந்திதா, நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சைமன் K கிங் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான முதலே படத்திற்கான எதிர்பார்ப்பு கிளம்பியது. நடிகர் சூர்யா இந்த போஸ்டரை வெளியிட்டார். இந்த போஸ்டரை ட்ரெண்ட் செய்தனர்
இந்நிலையில் படத்தின் டீஸரை வெளியிட்டார் இசைப்புயல் AR ரஹ்மான்.