பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடித்துள்ள திரைப்படம் கபடதாரி.

இதில் நாசர், நந்திதா ஸ்வேதா, மயில்சாமி, ஜெயப்பிரகாஷ், ஜே.சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சைமன் K கிங் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தனஞ்ஜெயன் தயாரித்து வருகிறார்.

கபடதாரி படம் ஜனவரி 28-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் குழுமம்.

இந்நிலையில் கபடதாரி படத்தின் ட்ரைலர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. ட்ராஃபிக் போலீஸாக இருக்கும் சிபி சத்யராஜ், நடந்த குற்றத்தை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் கதையாக இருக்கக்கூடும். விறுவிறுப்பான இந்த ட்ரைலர் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.