தமிழ்சினிமாவை பொருத்தவரை ஒரு வித்தியாசமான கதை வந்தால் போதும் அதை வைத்து இந்த நெட்டிசன்கள் கலாய்த்து தல்ல ஆரம்பித்து விடுவார்கள். இவர்களின் பிடியில் இருந்து தப்பித்த ஒரே படம் பாகுபலி மட்டும் தான். காஷ்மோராவும் பீரியட் பிலிம் தான் ஆனால் பாகுபலியை மறந்து விட்டு இந்த படத்தை பாருங்க அப்படின்னு படக்குழு கேட்டுக் கொண்டதால் அதை மறந்து விட்டு படத்தை பார்க்க ஆரம்பித்தோம் சரி கதை களத்தைப் பார்ப்போம்.
கார்த்திக் காஷ்மோரா என்ற பெயரில் படத்தில் வருகின்றார், இவர் பொய்யாக பேயை ஒட்டும் தொழிலை செய்கின்றார் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றார் இவருக்கு அப்பாவாக விவேக் வருகின்றார் படம் ஆரம்பம் ஆன முதல் செம்ம ஹாரராக இருக்கும் ஆனால் கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் கார்த்தியின் வழக்கமான காமெடி பாணியில் பயணிக்கின்றார்.
ஒரு கட்டத்தில் கார்த்திக் ஒரு எம்.எல்.ஏ வீட்டுக்கு பேய் ஓட்ட செல்கின்றார் அவர் செய்யும் சித்து விளையாட்டு எப்படியோ அவர்களுக்கு நன்மையில் முடிகின்றது. அடுத்த நாள் எம்.எல்.ஏ வீட்டுக்கு வருமான வரி சோதனை வர அவரின் வீட்டில் உள்ள கருப்பு பணத்தை எல்லாம் காஷ்மோரா நம்பிக்கையானவன் அவன் வீட்டில் வைத்து விடுங்கள் என்று சொல்கின்றார் ஆனால் அந்த சமயம் கார்த்திக் ஒரு பங்களாவில் மாட்டி கொள்கின்றார் அதனால் விவேக் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு ஓடி விடுகின்றார்.
பின் எப்படியோ தீடிரென விவேக்கும் அந்த பங்களாவில் வந்து சேர்ந்துவிடுகின்றார், அவர்களை யார் அந்த இடத்துக்கு தூக்கிவந்தது அந்த பங்களாவில் இருந்து இருவரும் வெளியே வந்தார்களா இல்லையா என்பது தான் மீதிக் கதை.
கார்த்திக் :-
படத்தில் கார்த்திக் மூன்று வேடங்களில் வருகின்றார் ஒன்று காஷ்மோரா மற்றொன்று ராஜ் நாயக் மூன்றாவது வேடமாக தலையில்லாமல் நடிக்கின்றார். இந்த மூன்றாது வேடத்தை படம் ரிலீஸ் ஆகும் வரை படு ரகசியமாக வைத்திருந்தனர். இந்த கதாப்பாத்திரம் குழந்தைகளை கவர வைக்கப்படுள்ளது. கார்த்திக்கின் கடின உழைப்புக்கு எங்கள் பாராட்டுக்கள்.
நயந்தாரா :-
ரத்தின மகா தேவி என்ற பெயரில் நயந்தாரா உண்மையான ராணியாகவே படத்தில் வாழ்ந்துள்ளார், என்ன நடை என்ன ஸ்டைல்லு இன்னும் 10 வருஷத்துக்கு இவங்க மார்க்கெட் இறங்காது போல அந்த அளவுக்கு இவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குநர் கோகுல்.
விவேக் :-
கடைசியாக மனிதன் படத்தில் காமெடியில் கலக்கியிருந்தார் விவேக். இதுவரை இவரை மிஸ் பண்ணிய அவரின் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு விருந்தாக அமையும் அதிலும் இவர் அடிக்கும் கவுண்டர் டயலாக் எல்லாம் திரையரங்கமே அதிர்ந்து போகின்றது. விவேக் இஸ் பேக்
சந்தோஷ் நாராயணன் :-
மீண்டும் அழகான இசையை கொடுத்துள்ளார், அது மட்டுமல்ல இந்த படத்துக்கு இவரின் பின்னணி இசை மிகப்பெரிய பலமாக உள்ளது.
கோகுல்:-
“ரௌத்திரம்”, “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா” ஆகிய படங்களை இயக்கிய கோகுலா இந்த படத்தை இயக்கியுள்ளார் எனற ஆச்சரியம் கண்டிப்பாக உங்களுக்கு படம் பார்க்கும் போது வரும். அந்த அளவுக்கு மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இந்த படத்தை இயக்கியுள்ளார். வாழ்த்துக்கள் கோகுல்
படத்தில் மிகவும் எதிர்பாத்து இருந்த பகுதி ராஜ் நாயக் வரும் பீரியட் காட்சிகள் தான், ஆனால் அந்த அளவுக்கு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும் கார்த்திக் பெண்கள் மீது மோகம் கொள்ளும் ராஜாவாக வருகின்றார் அவரை அந்த கதாப்பாத்திரத்தில் வைத்து பார்க்க முடியவில்லை என்பது தான் உண்மை.
படத்தில் வரும் CG காட்சிகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை படமாக்குதலுக்கும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மொத்ததில் இந்த காஷ்மோரா சிரிப்பு சரவெடியாக தீபாவளிக்கு வந்துள்ளது.