அட்டகத்தி, பீட்ஸா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட வித்தியாசமான – அதே நேரத்தில் – வெற்றிகரமான படங்களை தயாரித்தவர் சி.வி. குமார்.
தற்போது இவர், ராகவ் மிர்தாத் இயக்கத்தில், கௌஷிக் – அஞ்சலி நாயர் ஜோடியாக நடிக்கும் காலங்களில் அவள் வசந்தம் படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. ஒரு புகைப்பட ஆல்பத்தில், அஞ்சலி நாயர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரது பாதத்தை காதலுடன் பிடித்தபடி இருக்கிறார், கௌஷிக்.
ஆல்பத்தின் மேல் பகுதியில், ‘நவம்பர் 22 1990’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆகவே பழைய காதலைச் சொல்லும் படங்களின் வரிசையில், காலங்களில் அவள் வசந்தம் படமும் இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால், , சி.வி.குமார் வித்தியாசமான படங்களையே அளித்து வருபவர் என்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.