க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

Must read

சென்னை

மீபத்தில் ஓடிடியில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்துக்கு ரூ. 8 கோடி வசூல் ஆகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் இணைய தளத்தில் வெளியான க/பெ ரணசிங்கம் என்னும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர்.

விருமாண்டி இயக்கத்தில் வந்துள்ள இப்படத்தை இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இந்த படத்தை பார்க்க ஒரு முறைக்கு ரூ.199 கட்டணம் ஆகும்.

எனவே இந்த படத்தின் வசூல் சுமார் ரு.8 கோடி எனக் கூறப்படுகிறது.

இந்த ரூ.8 கோடியில் தயாரிப்பாளர் பங்கு 50% என்றாலும் இதுவரை ரூ.4 கோடி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் மூடி உள்ள நிலையில் இது தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை அளித்துள்ளதாக திரையுலக பிரமுகர்கள் கூறுகின்றனர்.

மற்றொரு பிரமுகர் விஜய்  நடித்துள்ள மாஸ்டர் படத்தை இதே முறையில் வெளியிட்டால் குறைந்தது 1 கோடிக்கும் மேல் பார்க்கக் கூடும் என்பதால் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் ஆகும் எனக் கூறி உள்ளார்.

More articles

Latest article