தெலுங்கானா முதல்-அமைச்சராக கே.சந்திரசேகர ராவ், இப்போது பதவி வகித்து வருகிறார்.

கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது அவர், வெளியில் அதிகம் தலை காட்டியதில்லை.

சந்திரசேகர ராவின் மகனும், டி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமராவ், கட்சி விவகாரங்களை கவனித்து வந்ததோடு, ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்தினார்.

கே.டி.ராமராவை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்று டி.ஆர்.எஸ். கட்சியின் முக்கிய தலைவர்கள், கே.சந்திரசேகர ராவை வலியுறுத்தி வருகிறார்கள்.

இதையடுத்து மகனை முதல்-அமைச்சராக்க சந்திரசேகர ராவ், முடிவு செய்துள்ளார்.

அவரது முடிவுக்கு, குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். அடுத்த மாதம் கே.டி.ராமராவ், தெலுங்கானா முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கே.டி.ராமராவ், முதல்வர் ஆவதை மாநில கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் சீனிவாஸ் மற்றும் பல எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றுள்ளனர்.

– பா. பாரதி