2013-ம் ஆண்டு இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் வேற லெவல் ஹிட் அடித்தது.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து த்ரிஷ்யம் 2 படம் வெளியானது . அனைவரையும் வியக்க வைத்தது த்ரிஷ்யம் 2 திரைப்படம். இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.

த்ரிஷ்யம் முதல் பாகம் தமிழில் பாபநாசம் எனும் பெயரில் கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் வெளியானது. ஜீத்து ஜோசப்பே தமிழிலும் இயக்கினார். தற்போது த்ரிஷ்யம் 2 வெற்றி அடைந்துள்ளதால் மற்ற மொழிகளிலும் ரீமேக் வேலைகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன.

தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்குகிறார்.

தற்போது த்ரிஷ்யம் 2 தமிழில் ரீமேக் ஆவது உறுதியாகியுள்ளது. இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன், கவுதமி இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பார்களா என்ற கேள்வியும் நிலவி வருகிறது. சமீபகாலமாக ஜோதிகா தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை செய்து வருவதால் பாபநாசம் 2 படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என கூறப்படுகிறது .