பாட்னா :

பீகார் மாநில சட்டபேரவை தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி. கட்சி 75 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதற்கு அடுத்த படியாக பா.ஜ,க. 75 இடங்களில் வென்றுள்ளது.

முதல்-அமைச்சர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், இளைய மகன் தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவரும் இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் கே.சி. தியாகி அளித்துள்ள பேட்டியில் “பீகார் தேர்தலில் சிராக் பஸ்வான் தலைமையிலான லோக்ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிட்டதால் தான், தேஜ் பிரதாப்பும், தேஜஸ்வியும் வென்றுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

“லோக்ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதான எதிரி. அவர் வேட்பாளர்களை நிறுத்தாமல் இருந்திருந்தால் ஐக்கிய ஜனதா தளம் 80 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்கும்” என்றும் கே.சி.தியாகி கூறினார்.

– பா. பாரதி