போபால்: மத்திய பிரதேச பாஜக மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து பாஜக பெயரை நீக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்றால் ஜோதிராதித்ய சிந்தியா முதலமைச்சர் என்று பரவலாக கருத்துகளும் வெளியாகின. ஆனால் கடைசியில் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் முதலமைச்சராக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியில் இருந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. ஒரு கட்டத்தில் தொடர்ந்து அதிருப்தியில் இருந்த அவர், தமது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார்.

இதையடுத்து நடந்த மிகப்பெரிய அரசியல் மாற்றத்தால் அங்கு பாஜக ஆட்சி ஏற்பட்டது. முதலமைச்சராக சிவராஜ்சிங் சவுகான் தேர்வானார். இந்நிலையில், சவுகானுக்கும் ஜோதிராதித்யாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந் நிலையில் தமது அதிருப்தியை வெளிக்காட்டும் பொறுப்பு, தமது டுவிட்டர் பக்கத்தில், முகவரியில் இருந்த பாஜக என்ற பெயரை நீக்கி உள்ளார். அதற்கு பதிலாக நான் ஒரு பொது சேவகன், கிரிக்கெட் ஆர்வலர் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பாக காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் இருந்த போது இப்படித் தான் தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.