டொராண்டோ:
னடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவரது மனைவி சோஃபி கிரிகோயர் ட்ரூடோ ஆகிய இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோஃபி கிரிகோயர் ட்ரூடோ ஆகிய இருவரும் தங்கள் 18 வருடத் திருமண வாழ்கையை முடித்துக்கொண்டு விவாகரத்து பெறவுள்ளதாக அறிவித்துள்ளனர். இருவரும் விவாகரத்து பெறுவதற்கான சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகப் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் விடுமுறை நாட்களில் ஒருவாரம் ஜஸ்டின் ட்ரூடோ, அவரது மனைவி சோஃபி கிரிகோயர் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடவுள்ளதாகவும் அதன் பிறகு பிரிந்து செல்வார்கள் எனவும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.