டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக என்வி ரமணா இன்று  பதவிக் ஏற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்ஏ போப்டே ஓய்வு பெற்றார். இதையடுத்து அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக என்வி ரமணா அறிவிக்கப்பட்டார். இந்தநிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போப்டேவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து  புதிய தலைமை நீதிபதியாக   என்.வி. ரமணா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

குடியரசு தலைவர் மாளிகையில் எளிமையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரமணாவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்பட முக்கியமான சிலர் மட்டுமே பங்கேற்றனர்.

என்.வி.ரமணாவின் பதவிக்காலம் அணடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ஆம் தேதிவரை உள்ளது.

முன்னதாக நேற்று  ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டேவுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.அப்போது பேசிய போப்டே, தன்னால் முடிந்த அளவு சிறப்பாக பணியாற்றிய திருப்தியுடன் ஓய்வு பெறுவதாக கூறினார்.