பெங்களூரு: மிஸ்டர் நரேந்திர மோடி,  எந்த நோக்கமும் இல்லாமல் நீங்கள் மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றினால் வைரஸ் மறைந்துவிடாது, முதல்வர்களுக்கு பாடம் கற்பிக்க நீங்கள் ஒரு தலைமை ஆசிரியர் அல்ல, முதலில் மாநில அரசாங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் உங்கள் பொறுப்பைக் காட்டுங்கள் என  முன்னாள் கர்நாடக மாநில காங்கிரஸ் முதல்வரும், மாநில எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில்வ, அதை கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்துள்ள மத்தியஅரசு, ஆலோசனை என்ற பெயரில் அடிக்கடி மாநில முதல்வர்களுடன், மருத்துவ நிபுணர்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், ஆக்சிஜன் நிறுவனங்கள் உள்பட பல துறையினருன்  பிரதமர் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பிரதமர் மோடியின் நடவடிக்கை குறித்து,  கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டமாக விமர்சித்துள்ளார்.

அதில், பிரதமர் மோடி அவர்களே, எந்த நோக்கமும் இல்லாமல் நீங்கள் மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றினால் வைரஸ் மறைந்துவிடாது.

முதல்வர்களுக்கு பாடம் கற்பிக்க நீங்கள் ஒன்றும் தலைமை ஆசிரியர் அல்ல

மாநில அரசுகளின் கோரிக்கைகளை முதலில் நிறைவேற்றுவதன் மூலம் உங்கள் பொறுப்பை காட்டுங்கள் .

 நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா நோயாளிகள் ஆக்ஸிஜன் இல்லாமல் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆக்ஸிஜனை வழங்க பிரதமர் மோடியிடம் மாநிலங்கள் கோருகையில் பதுக்கல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அவர் மாநிலங்களைக் கேட்கிறார்.

நம் நாட்டில் பற்றாக்குறை இருக்கும்போது ஏன் ஆக்ஸிஜன் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியிருந்தது?

பெங்களூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்பட்ட கொரோனா படுக்கைகள் 7621. அதில், 6124 படுக்கைகள் நிரம்பி வழிகிறது. மீதம் 1487 படுக்கைகள் உள்ள நிலையில், தினமும் 15,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர் .

பெங்களூரில் 65% சாதாரண படுக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதிக வசதி படுக்கைகளில் 96% ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 98% .சி.யூ படுக்கைகள் மற்றும் 97% வென்டிலேட்டர் படுக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. புதிதாக பாதிக்கப்படும் நோயாளிகள் எங்கே செல்வார்கள்அவர்கள் என்ன செய்ய வேண்டும்.

மேலும், நிலைமை கைமீறி சென்றுவிட்டது என்று கர்நாடக முதல்வர் ஒப்புக் கொண்டார். ஆகையால், மக்களுக்கு தீர்வு தேவை என்றும் அத்தகைய திறமையற்ற முதல்வருடன் கொரோனா நெருக்கடியை பிரதமர் மோடி எவ்வாறு தீர்ப்பார்?

இவ்வாறு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளார்.