சென்னை:  சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி வரும் 12ந்தேதி ஓய்வுபெறும் நிலையில், அவருக்கு புதிய பதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, கடத்தல்காரர்கள் மற்றும் அந்நிய செலாவணி மோசடி செய்பவர்களைத் தடுப்பதற்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்   தலைவராக நியமனம் செய்து, குடியரசு தலைவர் முர்மு உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனிஸ்வர்நாத் பண்டாரி கடந்த பிப்ரவரி மாதம் பதவி ஏற்றார். அவரது பணிக்காலம் வரும் 12ந்தேதியுடன் முடிவடைகிறத. இதையடுத்து, அவருக்கு மத்திய சட்ட அமைச்சகம் புதிய பதவி உள்ளது.  அதன்படி, கடத்தல்காரர்கள் மற்றும் அன்னிய செலாவணி மோசடியாளர்கள் தடுப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்  தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்தள்ளார்.

முனிஸ்வர்நாத் பண்டாரி, இந்த புதிய பதவியில், அதிகபட்சமாக  4 ஆண்டுகளோ அல்லது 70 வயதை எட்டும் வரையிலோ அல்லது மறுஉத்தரவு வரும் வரையிலோ பணியில் நீடிப்பார் என்று   ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.