மதுரை : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் என்று ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.  மேலும்,  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.  அத்துடன் இந்த விஷயத்தில், மாநில அரசு இந்த அளவிற்கு கீழ் நிலைக்கு செல்லக்கூடாது என்றும் கண்டித்துள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை முன்வைத்து தமிழக அரசு, தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உள்ளிட்ட 26 மேல்முறையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக அனைத்து மனுக்களும் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் காரசாரமான விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற  வேண்டும் என்பதை உறுதி செய்துள்ள உயர்நீதிமன்றம் அமர்வு, தீபத்தூண் கோவிலுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது என்றும், திருப்பரங்குன்றம் வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கி உள்ளது.

மேலும் நீதிபதிகள், “ஒவ்வொரு கார்த்திகையின் போதும் தீபம் ஏற்ற வேண்டும். மலை உச்சியில் தீபம் ஏற்ற பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் யாரும் தீபத்தூணில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்துடன் செல்லக் கூடாது. மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறியுள்ளதுடன்,  அரசியல் காரணங்களுக்காக எந்தவொரு மாநில அரசும் இந்த அளவிற்கு கீழ் நிலைக்கு செல்லக்கூடாது என்று தமிழ்நாடு அரசை கடுமையாக சாடி உள்ளத.,

திருபரங்குன்றத்தில்,  சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்பது அரசு அதிகாரிகள் தங்கள் வசதிக்காக உருவாக்கிய கற்பனை என கடுமையாக சாடிய நீதிபதிகள்,  பொது அமைதிக்கு பிரச்சினை ஏற்பட திமுக அரசே காரணம் என்றும் என்றும் குற்றம் சாட்டி உள்ளதுடன்,  கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பது அர்த்தமற்றது.  திமுக அரசு இந்த விஷயத்தை அரசியல் காரணங்கள் அடிப்படையாக கொண்டு செயல்பட்டது என்று சொன்னதுடன், அமைதி பேச்சுவார்த்தைக்கு திமுக அரசு அமைத்த குழு பிளவைத்தான் உருவாக்கி உள்ளது என்றும் சாடியுள்ளது.

திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள தீபத்தூன் கோவிலுக்கு சொந்தமானது என்றும்,   ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின்போதும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில்  தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பு அளித்து உள்ளனர்.

‘நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு செல்லும் என்றும், தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். ‘தனி நீதிபதி உத்தரவு போட்ட அன்றே தீபம் ஏற்றி இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை’ என்று நீதிபதிகள் தீர்ப்பில் மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக,  வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், மலையை நேரில் சென்று பார்வையிட்ட பிறகு தீர்ப்பு வழங்கினார். அதில் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டு உத்தரவு பிறப்பித்தார். அதை செயல்படுத்துவது, அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் மிக எளிதான வேலை.  ஆனால், அதைச் செய்யாமல், தனக்குத்தானே தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டது தமிழக அரசு. தீர்ப்புக்கு மேல் முறையீடு, அதற்கும் மேல் முறையீடு என்று வழக்கு மேல் வழக்காக போட்டதே தவிர, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதாக இல்லை.

‘தீபத்துாணில் தீபம் ஏற்றினால், இஸ்லாமியர்கள் தவறாக எண்ணிக் கொள்வார்களே, ஓட்டுக்கள் போய் விடுமே’ என்ற கற்பனையான அச்சத்தில், திமுக அரசு தவறான முடிவுகளை எடுத்து மேல் முறையீடு செய்தது மட்டுமின்றி, தீர்ப்பு வழங்கிய நீதிபதி மீதும்ர் அவதுாறு பரப்பினர் என்று சாடியது கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு, அட்டூழியம் செய்தனர். பார்லிமென்டிலும் பிரச்னை கிளப்பினர். நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு திமுகவினரின் ஓட்டு வெறி உச்சத்துக்கு சென்றது.

இத்தனைக்கும் தீர்ப்பு வெளியான நாளில், இஸ்லாமிய தரப்பில் இருந்து எந்த ஆட்சேபமும் எழவில்லை. அப்படி இருந்தும் திமுகவினர், இப்படி ஒரு மோசமான வேலையை செய்தனர். அவர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் வகையில், இப்போது இரு நீதிபதிகள் தீர்ப்பு அமைந்துள்ளது. இது, தமிழக அரசுக்கும், அதன் தவறான முடிவுகளுக்கு ஜால்ரா அடித்த கூட்டணிக் கட்சிகளுக்கும் வைக்கப்பட்ட ‘குட்டு’ என்று இந்துக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வாங்கு வங்கிக்காக திமுக அரசு எந்த அளவுக்கு கீழ்நிலைக்கு சென்றுள்ளது என்பதையும் நீதிபதிகள் சாடியுள்ளனர்.

[youtube-feed feed=1]