சென்னை
ஜூன் மாதம் 2 ஆம் வாரம் பிராடிவே பேருந்து நிலையத்துக்கு பதிலாக ராயபுரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் திரக்கப்பட உள்ளது.

மிகவும் பழமையான சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை தினசரி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். அரசு இதை ரூ.823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக மாற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இர்ஹ்ண்ள் பிராட்வே பஸ் நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட உள்ளன.
அங்கு 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படுவதுடன் பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. தற்போது பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள 168 கடைகளும் அங்கு வசித்து வந்த 45 குடும்பங்களும் மாநகராட்சி இடமாற்றம் செய்துள்ளது..
பேருந்து நிலையத்தை புனரமைக்கும் பணிகள் நடைபெறும் வரை, ராயபுரம் ரெயில் நிலையம் அருகே, இப்ராஹிம் சாலையில் உள்ள, சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான 3.45 பரப்பளவு கொண்ட இடத்தில் 3 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அந்த இடத்துக்கு ஆண்டுக்கு ரூ.3.86 கோடி வாடகையாக சென்னை துறைமுகம் நிர்ணயித்துள்ளது.
ராயபுரம் இப்ராஹிம் சாலையில் தற்போது நிழற்குடை, பயணிகள் அமர்விடம், கழிப்பறை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. வரும் ஜூன் 2 வது வாரத்தில் ராயபுரம் தற்காலிக பஸ் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.