திமுகவின் முதல் தலைவராக. கலைஞர் கருணாநிதி. 1969ஆம் ஆண்டு ஜூலை 27 ம் தேதிதான் பொறுப்பேற்றார். அன்றைய தினத்தை இன்று நினைவு கூர்வதில் பத்திரிகை.காம் பெருமை கொள்கிறது.
ஆம்.. திமுகவை தலைமையேற்றும், தமிழகத்தின் முதல்வராக ஆட்சியும் நடத்தி வந்த அண்ணா, 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார்.
இதையடுத்து, கட்சிக்குள் நிலவி வந்த சில குழப்பங்கள் சரி செய்யப்பட்டு, 1969 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி கருணாநிதி, திமுக-வின் தலைவராக பதவியேற்றார்.
அரசியலில் ஒரு சகாப்தம் கருணாநிதி. இவர், பிரதமராக இருந்ததுமில்லை; அதற்கு ஆசைப்பட்டது மில்லை. ஆனால், 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல்வாதி களின் பட்டியலில் இவருக்கு எப்போதும் ஓர் இடம் இருந்திருக்கிறது.
சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, கருணாநிதி என்ற பெயரை அவ்வளவு எளிதில் தவிர்த்துவிட முடியாது
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில ஆண்டுகளாக வயது முதிர்வின் காரணமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து,கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி நள்ளிரவில் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினமும் இன்று.