அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 17 தாலுக்கா நீதிமன்றங்களுக்கும் விரைவில் நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சி.வி சண்முகம், “தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 17 தாலுக்கா நீதிமன்றங்களுக்கு விரைவில் நீதிபதிகள் நியமிக்கப்பட்டு, நீதிமன்றங்கள் செயல்பட தொடங்கும். அதைப்போலவே, பொள்ளாச்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைப்பதற்கான மதிப்பீடு தயாராக உள்ளது. உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் விரைவில் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும்” என்று தெரிவித்தார்.