மதுரை
மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டாஸ்மாக் என பெயரிடாமல் மனமகிழ் மன்றம் என பெயரா என வினா எழுப்பி உள்ளனர்.

மதுரை உயர்நீதிமன்றத்தில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முத்துசாமிதாக்கல் செய்த பொதுநல மனுவில்.,
“ விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள விஸ்வநாதம் கிராமத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். மனமகிழ் மன்றம் அமைக்கப்படவுள்ள இடம் அதிக பொது மக்கள் நடமாடும் இடம்.
அந்த பகுதி அருகே வழிபாடு தளங்கள், பள்ளிகள், மருத்துவமனை மற்றும் வணிக வளாகங்கள் நிறைந்த பகுதி. பள்ளி மற்றும் வழிபாடு தளங்களில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் தான் மது கடைகள் இருக்க வேண்டும்.
ஆனால், விதிகளை முறையாக பின்பற்றவில்லை. எனவே பார் அமைக்க மாவட்ட ஆட்சியர் வழங்கிய அனுமதியை ரத்து செய்து, எதிர்காலத்தில் அந்த இடத்தில் பார் அமைக்க அனுமதி வழங்க கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்”
என்று குறிப்பிடப்பிடப்பட்டிருந்தது.
நேற்று இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், நீதிபதி மரிய கிளாட், அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”இங்கு ஏற்லமவே மனமகில் மன்றம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
நீதிபதிகள்,
“மனமகிழ் மன்றத்திற்கு எதன் அடிப்படையில் அனுமதி கொடுக்கப்படுகிறது. உடைந்த கேரம் போர்டுகளை 2 வைத்துக்கொண்டு மனமகிழ் மன்றம் என்ற பெயரில் பார் நடைபெறுகிறது. மனமகிழ் மன்றம் நடத்துவதற்கு எந்த விதியின் அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது, பதிவு செய்யப்பட்ட மனமகில் மன்றங்களின் By-Law என்ன, எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? அதற்கு தகுந்தார் போல் மதுபானங்கள் விநியோகிக்கப்படுகிறதா?
இதனை கலால் துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்கின்றனரா? அனுமதி மட்டும் வழங்கினால் போதுமானதாக இருக்குமா? அதனை முறையாக ஆய்வு செய்தனரா? டாஸ்மாக் பார் என்ற பெயரில் அனுமதி வழங்கினால் பிரச்னை வரும் என்பதற்காக மனமகிழ் மன்றம் என்று அனுமதி வழங்கப்படுகிறதா”
என வினா எழுப்பி உள்ளானர்.
பிறகு இந்த வழக்கு தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர், கலால் துறை அதிகாரிகள், மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் மேலாளர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
Madurai HC,