சென்னை’

பிரபல யூடியூபர்  சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாயந்ததால் பதியப்பட்ட ஆட்கொணர்வு வழக்கில் நீதிபதிகள் விலகி உள்ளனர்

தேனி மாவட்டத்தில் பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள்ர் குறித்து  அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ஆம் தேதி கோவை சைபர் க்ரைம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.  அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி அவரின் தாய் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு அறிவித்தது.  இந்த வழல்லஒ வேறு அமர்விற்கு மாற்ற பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்படுள்ளது..