மும்பை:
குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி குறித்து பேஸ்புக் ஆதாரங்களுடன் மும்பை ஐகோட்டில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தனது பேஸ்புக் நண்பருக்காக சட்டத்தை வளைத்து அவருக்கு ஜாமீன் வழங்கியதாக மும்பை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஒருவர் மீது பரபரப்புக் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
சர்வதேச புக்கியான அனில் ஜெய்சிங்கனி என்பவருக்கு ஜாமீன் பெற போலி டாகுமெண்டுகளை தயாரித்து வழங்கியதாக ஷங்கர் ரோஹ்ரா என்பவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு வழக்கறிஞர் கிஷோர் கேஸ்வானி என்பவர் காவல்நிலையத்தில் மோசடி புகார் செய்தார்.
faceboook
இது தொடர்பான  வழக்கு மும்பை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி அகமது சயீத்  முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மோசடி புகார் கூறப்பட்ட இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கினார் நீதிபதி.
ஆனால், ஜாமின் வழங்கிய நீதிபதி அகமது சயிது  குற்றவாளிகளின்  குடும்ப நண்பராகிய முகேஷ் கர்மா என்பவருடைய பேஸ்புக் நண்பர் என்பது தெரியவந்துள்ளது.
நீதிபது அகமது சையீதின் முன்னிலையில் விசாரணை நடந்த இரண்டு நாட்களும் முகேஷ் கர்மா நீதிமன்றத்தில் இருந்திருக்கிறார்.
இதுகுறித்து, வழக்கறிஞர்  கிஷோர் கேஸ்வானி  என்பவர், நீதிபதி அகமது சயீத் மற்றும் குற்றவாளி ஷங்கர் ரோஹ்ரா ஆகிய இருவருடைய பேஸ்புக் பக்கங்களின் ஸ்கிரீன் ஷாட்டுகளை  எடுத்து ஆதாரங்களுடன்  மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.