சீனா: கார் தயாரிப்பாளர்களுக்கு கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள்!

Must read

 
சீன அரசாங்கம் காற்று மாசடைவதைக் தடுக்க கடுமையான விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் விளைவாக கார் தயாரிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மாசுக் கட்டுப்பாட்டு விதிகளைக் கருத்தில் கொண்டு புதிய மாடல் கார்களை தயாரிக்கும்படி அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. 2020-க்குள் காற்று மாசடைவதை தடுக்கும் முயற்சியில் தீவிரமாக அந்நாடு ஈடுபட்டு வருகிறது.
1china car
இத்தகைய அடுத்த தலைமுறை கார்களுக்கு “நியூ எனர்ஜி வெஹிக்கிள்ஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதையொட்டி உள்நாட்டு தயாரிப்பாளார்கள் மாசுக் கட்டுப்பாட்டை மனதில் கொண்டு மின்சாரத்தில் இயங்கும் கார்களை தயாரிக்கும் பணியில் மும்மரமாக ஈடுபடத் துவங்கிவிட்டனர். ஆனால் இம்முயற்சி தொலைநோக்கில் பார்க்கையில் நிச்சயம் வியாபார ரீதியாக வெற்றியடையாது என்று அத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
இதே வேளையில் ஜெர்மனியைச் சேர்ந்த  பிரபல ஆடி கார் நிறுவனம் மின்சார பாட்டரியையும் பெட்ரோலைப் பயன்படுத்தி இயங்கும் அதிநவீன ஹைப்ரிட் கார்களை தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறது.
இதையடுத்து வரும் ஆண்டுகளில் சீன கார் சந்தையில் காற்றை மாசுபடுத்தாத அதிநவீன தொழில்நுட்பக் கார்களை எதிர்பார்க்கலாம் என்று நம்பப்படுகிறது.
 
நன்றி: http://www.moneycontrol.com/news/world-news/in-china39s-electric-car-boom-automakers-select-different-gear_7395021.html

More articles

Latest article