சென்னை: உயர் நீதிமன்றத்தில் எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி பி.வேல்முருகன் மாற்றப்பட்டுள்ளார். அந்த இடத்துக்கு புதிய நீதிபதியாக, என்.சதீஷ்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் சில நீதிபதிகளின் இலாகாக்களையும் மாற்றம் செய்து தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கடந்த ஜூலை மாதம் பதவிய நீதிபதி ஸ்ரீவஸ்தவா பதவி ஏற்ற நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இலாகாக்களை மாற்றம் செய்து அறிவித்துள்ளார். பொதுவாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகளின் வழக்கு விசாரணைக்கான இலாகாக்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும். அதன்படி தற்போது மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இலாகா மாற்றம் செப்டம்பரில் நடைபெற இருந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன்பே மாற்றப்பட்டு உள்ளது.
அதன்படி, எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி பி.வேல்முருகன், மேல்முறையீடு மற்றும் சிவில் மறுஆய்வு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரிக்கவுள்ளார்.