சென்னை:

மிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி வேலூர் மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் 320 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு  அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் சட்டத்துறையில் பட்டம் பெற்று தமிழ்நாடு பார் கவுன்சில் அல்லது இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலத்தைச் சேர்ந்த பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும்,  அறிவிப்பு வெளியான நாளில் எந்த நீதிமன்றத்திலாவது வழக்கறிஞராகவோ அல்லது பிளீடராகவோ பயிற்சி பெற வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.27,700- 770-33,090 – 920 – 40450- 1080- 44770.

தேர்வு கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூ.500ம், பதிவுக் கட்டணமா ரூ.150ம் செலுத்த வேண்டும்.

கட்டணத்தை நெட் பேங்கிங், வங்கி அட்டைகள் மூலம் செலுத்தலாம்.

ஏற்கனவே, டிஎன்எஸ்சியில் இணையத்தில் நிரந்தர பதிவு செய்திருப்பவர்கள் பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.05.2018

முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி: 09.06.2018

மேலும் தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு திட்டங்கள், விரிவான தகுதிகள், சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய

http://www.tnpsc.gov.in/notifications/2018_08_civil_judge_nofn.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.