‘பிடிவாரன்ட்’ நீதிபதி கர்ணன் உச்சநீதி மன்றத்தில் ஆஜர்!

Must read

டில்லி,

மிழக ஐகோர்ட்டு நீதிபதிகள் மீது புகார் கூறிய, நீதிபதி கர்ணன் உச்சநீதி மன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.

நீதிபதி கர்ணன் சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றியபோது, உடன் வேலை செய்த சக நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறினார். இதுகுறித்து விசாரிக்க உச்சநீதி மன்றத்திற்கு கடிதம் எழுதினார். அதன் காரணமாக நீதிபதி கர்ணன் கல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.

நீதிபதி சி.எஸ்.கர்ணன

அதைத்தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்கு ஆஜராக நீதிபதி கர்ணனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் விசாரணைக்கு வர மறுத்தார்.

மேலும் தன்னை அவமானப்படுத்தியதாக ரூ.14 கோடி இழப்பீடு தர வேண்டும் என அதிரடியாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதன் காரணமாக நீதிபதி கர்ணன்  மார்ச் 31ந்தேதிக்குள் உச்சநீதி மன்றத்தில்  நேரில் ஆஜராக வேண்டும் உச்சநீதி மன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.

அதைத்தொடர்ந்து கடந்த 17ந்தேதி, மேற்குவங்க மாநில காவல் துறைத் தலைவர் அந்த வாரண்டை கர்ணனிடம் நேரில் கொடுத்தார்.

இந்நிலையில், கடைசி நாளான   இன்று உச்சநீதி மன்றத்தில் 7 நீதிபதிகள் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் நீதிபதி கர்ணன் ஆஜராகி உள்ளார்.

More articles

Latest article